உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஒரு ரன்னில் 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஒரு ரன்னில் 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

pakistan

பிப்ரவரி 21, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தங்களது பொறுப்பான ஆட்டத்தினால்  310 ரன்கள் குவித்துள்ளனர்.  பேட்டிங் செய்து விளையாடிவரும் பாகிஸ்தான் எந்தஒரு அணியும் உலககோப்பை போட்டியில் சந்திக்காக ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் வெறும் ஒரு ரன் அடித்திருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக, நடையை கட்டினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சம்மாளிக்க முடியாமல் நாசீர் ஜாம்செட் ரன்எதுவும் எடுக்காமலும், அகமது ஒரு ரன்னிலும், யுனிஸ்கான் ரன்எதுவும் எடுக்காமலும், சோகையில் ரன்எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். பாகிஸ்தான் ஒரு ரன்னில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இதனையடுத்து களமிறங்கிய மிஷ்பா உல் ஹக், சோகைப் மசூத் விளையாடி வருகின்றனர்.