உங்கள் செல்பி சிலையாக வேண்டுமா?

உங்கள் செல்பி சிலையாக வேண்டுமா?

selfi

பிப்ரவரி 19, செல்பி பிரியர்களுக்காக ஜெர்மனை சேர்ந்த நிறுவனம் ஒன்று அவர்களின் செல்பியை 3 டி பிரின்டர் மூலம் உருவச் சிலையாக செய்து தருகிறது. செல்பி மூலம் தங்கள் உருவச் சிலையை செய்துகொள்ள விரும்புகிறவர்கள் ஸ்டைலாக நின்றுகொண்டு தங்களை 3 டி கேமரா மூலம் படம் எடுத்து அதை அந்த நிறுவனத்திடம் கொடுத்தால், அந்த படத்தை 3 டி பிரின்டர் மூலம் உருவச் சிலையாக செய்து தருகிறது.  4 அங்குல உருவச்சிலை ரூ. 6 ஆயிரமும், முழு உருவச் சிலை ரூ. 45 லட்சத்து 75 ஆயிரம் வசூலிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான ஸ்டூடியோக்களை அந்த நிறுவனம் ஜப்பான், டோக்கியோ, லாஸ்ஏஞ்சல்ஸ், மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் அமைக்கிறது.