ஜொகூர் மாநில மஇகா தொடர்பு குழுவினரும், ஜொகூர் மாநில மஇகா இளைஞர் பிரிவினரும் பிரதம துறையின் இந்தியர் விகாரங்களுக்கான சிறப்பு பணிக் குழுவுடன் இணைந்து மை டப்தார் எனும் நிகழ்வினை 13-7-2014 ஜொகூர் பாரு நகராண்மை கழகத்தின் மணி விழா மண்டபத்தில் நடத்தினர். மை டப்தார் நிகழ்வில், பிறப்பு பத்திரம், அடையாள அட்டை, சிகப்பு அடையாள அட்டை, குடியுரிமை போன்றவைகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் நிராகரிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்களுக்கு விளக்கமளித்தல் ஆகிய நிகழ்வுகள் நடந்தேறியது.
ஜொகூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவர் திரு தேவ சங்கரன் இந்த விண்ணப்பங்களின் மீது தகுந்த நடவடிக்கையை உடனே எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண மஇகா வின் இளைஞர் பிரிவு இளைஞர் பணி படை(YOUTH TASK FORCE) ஒன்றை உருவாக்கி இருக்கிறது.









