வெஸ்ட் இண்டீஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் விழுத்தியது அயர்லாந்து

வெஸ்ட் இண்டீஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் விழுத்தியது அயர்லாந்து

West-Indies-v-Ireland

பிப்ரவரி 17, உலக கோப்பையில் பி பிரிவு லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அதிர்ச்சி அளித்தது. வெஸ்ட் இண்டீஸ் 23.3 ஓவரில் 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், லெண்டில் சிம்மன்ஸ் – டேரன் சம்மி ஜோடி 6வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி அணியை சரிவில் இருந்து மீட்டது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்தது. அயர்லாந்து 45.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன் எடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தது.