என் தமிழ்

பாஜக தோற்றது மகிழ்ச்சி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

EVKS_2208766f

பிப்ரவரி 12, டெல்லியில் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியின் மூலம் அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். பாஜக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளில் அதன் சாயம் வெளுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், சில மாதங்களிலேயே அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது. டெல்லியில் பாஜக அடைந்த தோல்வி மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த தேர்தலை விட அதிக இடங்களை மக்கள் வழங்கியுள்ளனர். எனவே, அவர்கள் நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்றார்.

Scroll to Top