
மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார மன்றத்தின் ( SUKIM ) ஏற்பாட்டில் கெடாவில் உள்ள AIMST பல்கலைகழகத்தில் விளையாட்டு போட்டிகள் இன்று 11/07/2014 அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது. விழாவை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அழைச்சர் டத்தோ M.சரவணன் அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கால்பந்து, பூப்பந்து, கராத்தே, டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் முதல் முறையாக தேசிய அளவில் SUKIM அமைப்பால் இப்போட்டியில் நடத்தப்படுகிறது.






