வெள்ள பேரிடருக்கு உதவி சீனா முன் வந்துள்ளது

வெள்ள பேரிடருக்கு உதவி சீனா முன் வந்துள்ளது

rain34

ஜனவரி 14, நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் வெள்ள பேரிடருக்கு உதவ சீனா முன் வந்துள்ளது. பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் சீன அரசாங்கம் வழங்கிய 2950 முகாம், 60 நீர் வடிகட்டும் கருவி, 400 நீர் பாய்ச்சும் கருவி மற்றும் 220 ஜெனரேட்டர் போன்ற கருவிகளை மலேசியாவுக்கான சீன தூதர் டாக்டர் ஹுஆங் ஹூர்காங்கிடமிருந்துப் பெற்றுக் கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நம் நாட்டு மக்களுக்கு உதவ சீனா முன்வந்துள்ளதை தாம் பெருமளவில் மதிப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.இவ்வுதவி இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையையும் நல்லுறவையும் வெளிப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனா வழங்கிய இப்பொருட்கள் மிக விரைவில் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.