பனிமூட்டம் காரணமாக விமான சேவை, ரயில் சேவை பாதிப்பு

பனிமூட்டம் காரணமாக விமான சேவை, ரயில் சேவை பாதிப்பு

air1

ஜனவரி 14, சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் புகை மூட்டம் சூழ்ந்து உள்ளதால் விமானம் புறப்பாடு வருகை தாமதம் மேலும் டெல்லி, பெங்களூர், கொச்சி, மும்பை, நகரங்களுக்கு விமானங்கள் புறப்படவில்லை தகவல் தெரிவிக்கின்றனர். சென்னையில் போகி பண்டிகை கொண்டாடியதால் புகை மூட்டம் ஏற்பட்டது. ரயில் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மஸ்கட், அபுதாபி உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் வரும் விமானங்கள் தாமதமாக வந்தடையும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற பழமொழிக்கு கேற்ப அதிகாலையிலே மக்கள் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர். தை பொங்கலுக்கு முந்தைய தினத்தில் தேவையற்ற பழைய பொருட்களை எரித்து தமிழர்கள் போகி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தமிழக முழுவதும் நாளை பொங்கல் பண்டிகையை கரும்பு, மஞ்சள், புது பச்சஅரிசி பொங்கல் என மக்கள் கொண்டாட உள்ள நிலையில் பழைய பாய், துணி உள்ளிட்ட பொருட்களை அதிகாலையேலே எரித்து சென்னை மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர்.

பழைய பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்தாமல் மாசற்ற போகியை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி பண்டிகை காரணமாக கடும் புகை மூட்டம் ஏற்பட்டதால் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என தகவல் தெரிவித்துள்ளனர்.