ஜனவரி 13, பாலிவுட்டில் இப்போது பரபரப்பாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் அனுஷ்கா சர்மா. ஆமிர்கானுடன் ஜோடியாக இவர் நடித்துள்ள பி கே’ வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற அனுஷ்கா, கோஹ்லியுடன் ஜோடியாக சுற்றி திரிந்து பரபரப்பை அதிகமாக்கி இருக்கிறார். இந்நிலையில் பிரபல ஆங்கில இதழ் ஒன்று அனுஷ்கா சர்மாவை அணுகி உள்ளது. தங்கள் இதழின் அட்டை படத்துக்கு நிர்வாணமாக போஸ் தரும்படி கேட்டிருப்பதுடன் அதற்காக ரூ. 2 கோடி சம்பளம் தருவதாக கூறி இருக்கிறது. அதை அனுஷ்காவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். விரைவில் இதற்கான போட்டோ ஷூட் நடக்க உள்ளது. ஏற்கனவே இந்த இதழ் பிரபல நடிகைகள் பலரது நிர்வாண படங்களை அட்டை படங்களாக பிரசுரித்திருக்கிறது. அனுஷ்காவை பொறுத்தவரை இந்தி படத்தில் நீச்சல் உடையில் ஏற்கனவே நடித்திருக்கிறார். தற்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேறி நிர்வாண போஸ் தர சம்மதித்திருக்கிறார். இவரது இந்த முடிவு காதலன் விராட் கோஹ்லிக்கு ஷாக் ஏற்படுத்தி உள்ளது. இப்படி போஸ் தர அனுஷ்காவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறாராம். அதையும் மீறி அவர் போஸ் கொடுத்தால் இவர்களின் காதல் முடிவுக்கு வரும் என பாலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
விராட் கோஹ்லிக்கு ஷாக் ஏற்படுத்தி உள்ளது: அனுஷ்கா சர்மாவின் நிர்வாணமாக போஸ்
