என் தமிழ்

போதைக்கு அடிமையான கனவு கன்னி!

angelina

ஹாலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி ஏஞ்சலினா ஜூலி. உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் கனவு கன்னி. இவர் பெற்ற குழந்தைகள் 3, தத்து குழந்தைகள் 3 என 6 குழந்தைகளின் தாய். இவர் நடித்த சால்ட் படம் ஆக்ஷன் ஹீரோக்களுக்கே சவால் விட்டது. ஆஸ்கர் விருதுகளை வென்றவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது. இதனால் தனது இரு மார்பகங்களையும் அகற்றி விட்டார். அதற்கு பிறகும் நம்பர் ஒன்னாகவே நீடித்தார். இந்த நிலையில் ஏஞ்சலினா கடும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக 15 நிமிட வீடியோ காட்சி ஒன்று இணைய தளத்தில் வலம் வருகிறது. இதில் உடல் சோர்ந்து தேகம் மெலிந்து, கண்ணகளில் ரத்தம் வற்றி காணப்படுகிறார். சரும நோய் கண்டதுபோல அவர் உடல் முழுவதும் அடையாளம் தெரிகிறது.

அரை போதையில் யாருடனோ அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். வாளிப்பான அவரது முதுகு எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கிறது.

இந்த வீடியோவை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் ஒருவன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. “ஏஞ்சலினா எனது வாடிக்கையாளர் பல ஆண்டுகாக அவருக்கு நான் ஹெராயின் மற்றும் கோகோவின் சப்ளை செய்து வருகிறேன். இந்த வீடியோ அவரது அனுமதியுடன் எடுத்தேன்” என்று அவன் தெரிவித்திருக்கிறான்.

“ஒரு பெரிய ஆபத்தில் சிக்கி இருந்தேன். நல்ல வேளையாக அதிலிருந்து மீண்டு விட்டேன்” என்று ஏஞ்சலினா முன்பு கூறியிருந்தார். அது போதை பழக்கத்திலிருந்து விடுபட்டதைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது மீண்டும் போதை பழக்கதில் சிக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பாக அவர் விளக்கம் அளித்தால்தான் உண்மையான நிலவரம் தெரிய வரும். அவரை தொடர்பு கொள்ள ஹாலிவுட் மீடியாக்கள் முயற்சித்து வருகிறது.

Scroll to Top