மோசமான வானிலை காரணமாக விமான மற்று பாதையில் சென்றது

மோசமான வானிலை காரணமாக விமான மற்று பாதையில் சென்றது

malaysia-airlines-b777-200er

ஜனவரி 3, நேற்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோத்தா கினாபாலுக்கு புறப்பட்ட மாஸ் ஏர்லைன்ஸ் மோசமான வானிலை காரணமாக மிரிக்கு திருப்பப்பட்டது.
காலை 7.30 மணியளவில் கிளம்பிய MH2604 விமானம் காலை 10.05 மணிக்கு கோத்தா கினாபாலுவை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து செலுத்த முடியாமல் அது மிரியில் தரையிறங்கியது. சில மணி நேரங்களுக்கு பிறகு கிளம்பிய அவ்விமானம் மதியம் 12.45 மணியளவில் கோத்தா கினாபாலுவை வந்தடைந்தது.