டிசம்பர் 24, கிறிஸ்துவர்களுக்கு “கிறிஸ்துமஸ் வாழ்த்து’ கூறுவதும் அவர்களோடு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது கூடாது என இஸ்மா எனப்படும் முஸ்லீம் அமைப்பின் ஆர்வலரான அபு அமீன் தெரிவித்திருக்கும் கருத்துக்கு நகர்புற மேம்பாடு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அம்னோ கோத்தா பெலுட் சட்டமன்ற உறுப்பினர் தாம் தொடர்ந்து கிறிஸ்துவ நண்பர்களுக்கு ‘கிறிஸ்துமஸ் வாழ்த்து’ கூறப்போவதாகவும் எதிர்வரும் கிறிஸ்துமஸ் பெருநாளை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும் தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவிப்பது மதம் சார்ந்த விசயமில்லை என்றும் இஸ்மா அபு அமீன் தெரிவித்திருக்கும் கருத்து முற்றிலும் முரண்பாடானது என அப்துல் ரஹ்மான் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.