டிசம்பர் 24, இவ்வாண்டின் PT3 மதிப்பீட்டின் முடிவுகள், மாணவர்கள் உயர்நிலை சிந்தனை திறனை எட்டிப் பிடித்துள்ளனர் என்பதைப் படம் பிடித்து காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படிவம் மூன்று மாணவர்களுக்காக புதியதாய் அறிமுகப்படுத்தப்பட்ட PT3 மதிப்பீடு பி.எம்.ஆர். தேர்வை காட்டிலும் மாணவர்களின் உயர் நிலை சிந்தனை திறனை அதாவது ‘KBAT’ எனும் திறனை சோதித்துப் பார்க்கும் ஒரு தளமாக திகழ்கிறது.
மேலும், இவ்வாண்டு PT3 மதிப்பீட்டில் மாணவர்கள் உயர் நிலை சிந்தனை திறனுக்கான சோதனைகளில் சிறந்த தேர்ச்சியை வழங்கியிருப்பது 2013 லிருந்து 2025-ஆம் ஆண்டிற்கான மலேசிய கல்வி திட்டத்தின் மேம்பாட்டிற்கு அடித்தளமாக அமைகிறது என்று தேர்வு வாரியத்தின் தரவு நிர்வாக பிரிவு அதிகாரி நொர்சிலா முகமது யுசோவ் தெரிவித்தார்.
Previous Post: கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பது மதம் சார்ந்த விசயமில்லை