ஜனவரி மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய வாய்ப்பு

ஜனவரி மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய வாய்ப்பு

petrol

டிசம்பர் 20, உலக சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வந்தால் RON95 மற்றும் டீசல் விலை எதிர்வரும் ஜனவரி 1 முதல் 1 லிட்டர் RM2-க்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 18 நாட்களாக RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் சராசரி விலை ஒரு லிட்டர் RM2-க்கு குறைந்து வருவதாக துணை நிதியமைச்சர் டத்தோ அகமது மஸ்லான் தெரிவித்தார். உலக சந்தையில் பெட்ரோல் விலை இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்து குறைந்து வந்தால் RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் சந்தை விலையும் குறையும் என மஸ்லான் மேலும் கூறினார்.
தற்போது RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM2.26 என்றும் டீசல் விலை லிட்டருக்கு RM2.23 என்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.