மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடி

MULLAPERIYAR_955631f

டிசம்பர் 20, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4,418 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 3,804 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, பாசனத்திற்காக குறைந்தளவே தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட் டம் சரிவில் இருந்து மீண்டுள்ளது. நேற்று காலை சற்று அதிகரித்து 96.29 அடியானது. நீர் இருப்பு 60.13 டி.எம்.சி.