டிசம்பர் 20, பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளியில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கர சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் தூக்கு தண்டனை கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 17 பேருக்கும், 2-வது கட்டமாக 45 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இதில் பயங்கர தீவிரவாதிகள் 2 பேர் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என பாகிஸ்தான் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், 2009-ம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையிடத்தை தாக்கிய அகீல் என்கிற டாக்டர் உஸ்மான், 2003-ம் ஆண்டு முன்னாள் ராணுவ தளபதி பர்வேஸ் முஷரப் மீது தாக்குதல் நடத்திய அர்ஷத் முகமது ஆகியோர் நேற்று தூக்கில் போடப்பட்டனர். அகீல் குடும்பத்தினர் அவரை பைசலாபாத் சிறையில் கடைசியாக பார்த்துச் சென்றுள்ளனர். பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 8 ஆயிரம் மரண தண்டனை கைதிகள் இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.