என் தமிழ்

அமெரிக்காவில் மூன்று இடத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதன்

Gun-murderer-638x424

டிசம்பர் 16, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் உள்ள மோன்ட்கோமேரி கவுன்டியில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் புகுந்த மர்ம மனிதன் 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளான்.

லோயர் சால்போர்டு டவுன்சிப்பில் இன்று அதிகாலை 3.55 மணியளவில் முதல் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் அந்த பெண் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது.

அடுத்த அரைமணி நேரம் கழித்து லேன்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, இதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். மேலும், சவுதர்டனில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இவர்களை சுட்டுக்கொலை செய்தவர் பற்றி போலீசார் விவரம் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால், அவன் முன்னாள் ராணுவ வீரராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுபோக பென்ஸ்பர்க்கிலும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதுவும் இந்த மூன்று சம்பவங்களின் தொடர்ச்சி என கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் எந்த தகவலும் வெளியிடவில்லை.

Scroll to Top