டிசம்பர் 5, வயசு ஆகிட்டே போகுது சட்புட்டுனு கல்யாணத்த பண்ணிக்க’ என்று சார்மிக்கு வீட்டில் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘வாம்மா சார்மி நீதான் ஜோதி லட்சுமியா நடிக்கப்போறே’ என அழைத்தார் தெலுங்கு பட இயக்குனர் புரி ஜெகனாத். மகுடிக்கு மயங்கிய பாம்பாக அவர் பின்னாலேயே சென்றுவிட்டார் சார்மி. ‘கிளப் டான்ஸ் ஆடத் தெரியுமா?’ என்று கேட்டு அவருக்கு அந்த காலத்து படங்களை போட்டுக்காட்டி, ‘இதுதான் கிளப் டான்ஸ் பாத்துக்க…’ என்று அடையாளம் காட்டிய இயக்குனர், அவரை அலேக்காக கோவா தூக்கிச் சென்றுவிட்டார்.
‘ஜோதிலட்சுமி’ படப்பிடிப்பிற்காகத்தான் யூனிட்டுடன் இவர்கள் கிளம்பி இருக்கிறார்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என 3 மாதத்துக்கு கோவாவில் முகாமிடும் இவர்கள் அங்கேயே பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்புகிறார்கள். அங்கு சார்மியும் புரி ஜெகனாத்தும் டேட்டிங் சென்று ஜமாய்க்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.புரி ஜெகனாத் எந்த படம் இயக்கினாலும் சென்டிமென்ட்டா அதில் ஒரு காட்சியையாவது பாங்காக்கில் எடுத்துவிடுவார். அந்த சென்டிமென்ட் சார்மி படத்துக்காக மாற்றிக்கொண்டு கோவாவை தனது புதிய சென்டிமென்ட் ஸ்பாட் ஆக தீர்மானித்திருக்கிறாராம்.