டிசம்பர் 5, பினாங்கு மாநிலத்தில், ரேபிட் பினாங்கு பேருந்து வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நிஜமான சம்பவம் போல நடத்தப்பட்டது.
இப்பயிற்சியின் போது, சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
Telerob Teodor எனும் வெடிகுண்டு அகற்றும் ரோபோட் கருவி மூலம் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அந்த அதிநவீன ரோபோ கருவி பேருந்தின் ஜன்னலை உடைத்து, அதிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் காயமடைந்த அனைத்து பயணிகளும் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக நேற்று காலை இரண்டு பேருந்துகளும் ஜோர்ஜ்டவுனிலிருந்து ஸ்வெட்டன்ஹாம் பியர் சென்றுக்கொண்டிருந்த போது, அவ்விரு பேருந்து ஓட்டுனர்களில் ஒருவருக்கு அனாமதேய நபர் ஒருவர் அழைத்து இரண்டு பேருந்துகளிலும் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து தொலைப்பேசி அழைப்பு பெற்ற பேருந்து ஓட்டுனர் ரேபிட் பினாங்கு கமுயூட்டர் தகவல் மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்வெட்டன்ஹாம் பியர் வந்தடைந்ததும், இரு பேருந்து ஓட்டுனர்களும் அங்கு காத்துக்கொண்டிருந்த போலீசார் மூலம் வெல்ட் குவேவில் அமைந்துள்ள டெர்மினல் பி-க்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர். இது ஸ்வெட்டன்ஹாம் பியரிலிருந்து 5 நிமிட தூரமாகும். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் டெர்மினல் பி நிறுத்தத்திற்குச் செல்லும் முன்பே இரண்டு பேருந்துகளுள் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்தது.
ரேபிட் பினாங்கு ஓட்டுனர்கள் இக்கட்டான சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதற்கான ஒரு மாதிரி சோதனையாக இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ரேபிட் பினாங்கு பேருந்து ஒருவர் பயணியால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.