டிசம்பர் 5, ம.இ.கா இளைஞர் பிரிவின் 29வது தேசிய பேரவை வருகின்ற 7 டிசம்பர் 2014 அன்று புத்ரா உலக வாணிப மையத்திலுள்ள துன் ஹீசேன் ஒன் மண்டப்பத்தில் நடைபெறவிள்ளது. நாடு தழுவிய நிலையிலிருந்து 500க்கும் மேற்பட்ட ம.இ.கா இளைஞர் பிரிவு பேராளர்கள் இப்பேரவையில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
கடந்தாண்டு பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் ச.சிவராஜ் அவர்களது தலைமையில் நடக்கும் முதல் பேரவை இதுவாகும் இப்பேரவையில் கலந்துகொள்ளும் பேராளர்கள் அனைவருக்கும் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் ச.சிவராஜ் நாளை 6/12/2014 (சனிக்கிழமை) வரவேற்பு விருந்து ஒன்றை கோலாலும்புர் ம.இ.கா தலைமையகத்திற்கு அருகாமையிலுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இரவு 7.30 தொடங்கி வழங்குவார். தொடர்ந்து மறுநாள் காலை 9மணிக்கு ம.இ.கா இளைஞர், மகளிர், புத்ரா பிரிவுகளின் பேரவைத் தொடக்கவிழா நடைபெறும். இப்பேரவை தொடக்கவிழாவை ம.இ.காவின் தேசியத்துனை தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமாகிய மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் தொடங்கி வைப்பார். அவருடன் சிறப்பு விருந்தினராக தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவுத் தலைவரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமாகிய மாண்புமிகு கைரி ஜமாலுடின் அவர்களும் இத்தொடக்கவிழாவில் கலந்துகொள்வார்.
அதனை தொடர்ந்து முற்பகல் 11மணி அளவில் ம.இ.கா இளைஞர் பிரிவின் பேரவை தொடங்கும் இதில் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் ச.சிவராஜ் அவர்களின் கொள்கை பரப்புரை ஆண்டறிக்கை, பேராளர்களின் கேள்வி-பதில்களுடன் இவ்வருடத்தின் ம.இ.கா இளைஞர் பிரிவின் தீர்மானங்கள் ம.இ.கா இளைஞர் பிரிவின் தேசியத் துணைத்தலைவர் ரா. தினாளன் அவர்களால் அறிவிக்கப்படும். இவ்வருடம் பார்வையாளர்கள் பேரவைக்கு வருவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள அனைவரும் பேரவை அன்று காலையில் 9 மணிக்குள் தங்களைப் பதிவு செய்து கொள்ள கோட்டுகொள்கிறோம். கல்வி, விளையாட்டு, சமயம், பொருளாதாரம், தொடர்பான துறைகளில் இந்திய இளைஞர்களின் மேம்பாடு குறித்து ம.இ.கா இளைஞர் பிரிவின் பேராளர்கள் விவாதிக்கவுள்ளனர், ஆகவே இதுவே ஒருஅழைப்பாக ஏற்று பொதுமக்கள் அனைவரும் அன்புடன் கலந்துகொள்ள அழைக்கிறோம்.