டிசம்பர் 2, சானியா மிர்ஸா, சாய்னா நெஹ்வால் என எல்லோரும் விரல் நீட்டுவது தீபிகா படுகோனே பக்கம்தான். விஷயம் வேறொன்றுமில்லை… குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை வரலாறு படமாக வந்து வெற்றியடைந்ததால், அடுத்ததாக இவர்களின் வாழ்க்கைக் கதை பக்கம் பாலிவுட் இயக்குனர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.
ஒருவேளை இப்படி படம் வந்தால், தங்கள் கேரக்டரில் நடிக்கப் பொருத்தமானவர் என இவர்கள் சுட்டுவது தீபிகாவை! காரணம், தீபிகா ஸ்போர்ட்ஸ் குடும்பப் பின்னணி கொண்டவர்; விளையாட்டை நேசிப்பவர்!
‘இசை உலகில் இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பெண்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பியான்ஸ் நோல்ஸ். கடந்த ஆண்டு நான்காம் இடத்திலிருந்த அவர், இரண்டு மடங்கு சம்பாதித்து நம்பர் 1 ஆகியிருக்கிறார். அவர் 2014ம் ஆண்டில் சம்பாதித்தது 711 கோடி ரூபாய்.
பரிணீதி சோப்ரா நடித்த ‘கில் தில்’ படமும் ஃபிளாப். ‘‘பரிணீதி குண்டாக இருப்பதால்தான் படம் ஓடவில்லை’’ என வில்லன் நடிகர் கமால் கான் வெளிப்படையாக கிண்டல் செய்ய, கடும் கோபத்தில் இருக்கிறார் பரிணீதி.
கடுமையான ஜுரத்தால் வெகுவாக இளைத்து விட்டார் ஷ்ரத்தா கபூர். ‘ரெஸ்ட் எடுக்க வேண்டும்’ என டாக்டர்கள் சொன்ன எச்சரிக்கைகளையும் மீறி டான்ஸ் ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறார். ‘ஏ.பி.சி.டி. 2’ படத்துக்காகத்தான் இந்த மெனக்கெடல். குடும்பம் அவரைக் கவலையோடு பார்க்கிறது.
செப்டம்பரில்தான் பெண் குழந்தை பெற்றெடுத்தார் ஈவா மெண்டிஸ். மூன்றே மாதங்களில் பழைய தோற்றம் பெற்று ஷூட்டிங் வந்து விட்டார். 40 வயதில் எப்படி இதை சாதித்தார் என பலரும் ஆச்சரியப்பட, ‘‘நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு சாப்பிட்டேன்’’ என டயட் ரகசியம் சொல்கிறார் அவர்