டிசம்பர் 2, சிலிம் ரிவர் ஜாலான் குவாலா சிலிம் எனும் சாலை இடிந்து விழுந்ததில் கம்போங் குவாலா சிலிம் பகுதியில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சாலையைக் கடப்பதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தினால் அந்த சாலை சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து கடும் மழை பெய்துக் கொண்டிருந்ததன் காரணமாக நிலத்தடியில் நீர் ஒட்டம் ஏற்பட்டு அந்த சாலையின் பெரும் பகுதி இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த சம்பவத்தினால் அங்கே உயிர் சேதங்கள் ஏதும் நிகழவில்லை. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் முடியும் வரை அங்குள்ள பொது மக்கள் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு சாலையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
Previous Post: மலேசிய வந்தார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா
Next Post: ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்