முதல் மலேசிய இந்தியர் விளையாட்டு போட்டி (SUKIM) 2014 கெடாவில் வரும் ஜூலை 11 முதல் 13 வரை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி மலேசிய இந்தியர் விளையாட்டு போட்டி (SUKIM) 2014 அறிமுக விழா இன்று 02 ஜூலை 2014, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சக வளாகம், புத்ராஜெயா வில் நடைபெற்றது. இந்த சுகிம் விளையாட்டு போட்டி விழா மலேசிய இந்திய இளைஞர்களிடையே உள்ள புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சுக்மா போட்டிகளுக்கும் தயார் செய்ய பயிற்றுவிக்கும் எண்ணத்துடன் நடத்தப் பெறுகிறது. இதை திரு. தினகரன், சுகிம் தலைவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார். மேலும் தமிழ் பள்ளிகளில் ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் அமைக்க உதவி வேண்டி தனது உரையில் கோரிக்கை வைத்தார். இந்த விளையாட்டு போட்டி நடைபெற பெரும் உதவியாக இருந்த டத்தோ M. சரவணன், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர், மஇகா வின் தேசிய உதவி தலைவர் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
டத்தோ M. சரவணன், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர், மஇகா வின் தேசிய உதவி தலைவர் அவர்கள் சுகிம் விளையாட்டு போட்டியை அறிமுகம் செய்து பேசினார். இந்த விளையாட்டு போட்டி விழாவினை நடத்தும் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்திற்கு தனது பாராட்டுகளை அமைச்சர் தெரிவித்தார்.
ஜீலை 10 முதல் 14 வரை கெடாவில் உள்ள AIMST பல்கலைகழகத்தில் நடக்கவிருக்கும் இந்த விளையாட்டு போட்டியில் பூப்பந்து, கராத்தே, ஸ்குவாஷ், டென்னிஸ் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெறும். பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், பாகாங், நெகரி செம்பிலன், மலாக்கா, ஜோகூர் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 1000 இளம் விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் பங்குவெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடந்த அறிமுக விழாவில் டத்தோ சரவணனுடன் டத்தோ ஜமில் பின் சல்லாஹ், தலைமை செயலாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, டத்தோ T.மோகன், தலைவர், மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம், மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் இயக்குனர்கள் டத்தோ ராதா கிருஷ்ணன் மற்றும் திரு. S. ,முருகன், திரு, சிவராஜ் சந்திரன், ம.இ.கா வின் தேசிய இளைஞர் தலைவர், திரு. தினாளன், ம.இ.கா வின் தேசிய உதவி இளைஞர் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
டத்தோ M.சரவணன் சுகிம் மாநில பிரதிநிதிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கினார். பூப்பந்து போட்டிகள் குழுத் தேர்வுக்கான குலுக்கலும் இன்றைய அறிமுக விழாவில் நடைபெற்றது.