நவம்பர் 19, RON97 பெட்ரோல் விலை இன்று முதல் 20 சென் சரிந்து ஒரு லிட்டர் 2ரிங்கிட் 55 சென் விற்கப்படும். அதேவேளையில் RON 95 விலையில் மாற்றமில்லை. இத்தகவலை துணை நிதியமைச்சர் டத்தோ அஹ்மாட் மஸ்லான் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த மாதம், அரசாங்கம் உதவித்தொகையை மறுபரிசீலனை செய்தபோது RON 95 விலை 2 ரிங்கிட் 10 சென் –னிலிருந்து 2 ரிங்கிட் 30 சென்னாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.