என் தமிழ்

கறார் சம்பளம் கேட்கும் ஸ்ரீதிவ்யா

Sri-Divya-in-signing-spree

நவம்பர் 14, நகர்புறம், காட்டுமல்லி படங்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்கமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம், ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களின் வெற்றி அவரை இப்படிப் பேச வைக்கிறது என்று சொன்னாலும், முதலில் குறைந்த சம்பளத்துக்கு சம்மதித்து நடித்து வந்த படங்களின் ஷூட்டிங் திடீரென்று நிறுத்தப்பட்ட நிலையில்,

இப்போது ஒரு படத்துக்கு 45 லட்ச ரூபாய் வரை சம்பளம் கேட்டு வாங்கும் நிலைக்கு மார்க்கெட் ஏறிவிட்டதால், மீண்டும் அந்த பழைய படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பது என்றால், புதிய சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்று, ஸ்ரீதிவ்யா தரப்பில் சொல்லிவிட்டார்களாம். இதனால் மனம் வெதும்பிய தயாரிப்பாளர்கள், தங்கள் சங்கத்தில் ஸ்ரீ திவ்யா மீது புகார் கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Scroll to Top