நவம்பர் 14, தனியார் கல்வி நிலையங்களின் மீது அணுக்கமான கண்காணிப்பு செலுத்தப்பட வேண்டும் என காப்பார் மக்களவை உறுப்பினர் ஜி.மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.
கப்பளாபத்தாசில் அலயன்ஸ் மருத்துவ கல்லூரி மூடப்பட்ட தால் 300 மருத்துவ மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக ஆகியிருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து சீராக நடைபெற போதுமான நிதி இருப்பதையும் கட்டமைப்பு இருப்பதையும், அள்பலம் இருப்பதையும் அனுமதி வழங்கும் முன்னர் உறுதிப்படுத்த வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றார் அவர்.
மூடப்பட்ட மருத்துவக் கல்லுரியில் உயர்நிலை கல்வியாளார்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என தகவல் வெளியானது.