என் தமிழ்

விஷாலின் ராசி ஜோடி

1381209729_pandiyanaadu_censor

நவம்பர் 8, லட்சுமி மேனனுக்கும், விஷாலுக்கும் இடையே நல்ல நட்பு தொடர்கிறது. அதை அவ்வப்போது நிரூபிக்கும் விதமாக, ஒவ்வொரு படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக முதலில் பேசப்படும் நடிகை லட்சுமி மேனனாகவே இருக்கிறார்.

மேலும், ‘பாண்டிய நாடு’ படத்தில் விஷாலுடன் நெருக்கம் காட்டி நடித்த அவர், மீண்டும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஜோடி சேர்ந்தார். இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், மீண்டும் விஷால், லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ளனர்.

இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது, “சுசீந்திரன் உருவாக்கிய கதைக்கும், கேரக்டருக்கும் லட்சுமி மேனன் பொருத்தமாக இருந்தார். மற்றபடி நான் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை” என்றார். இதே பதிலை ல.மேனனும் சொல்கிறார். சொல்லி வெச்சுக்கிட்டு பேசறாங்களோ.

Scroll to Top