என் தமிழ்

லிங்கி ரூமா ராக்யாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

House-on-fire

நவம்பர் 8, சில தினஙகளுக்கு முன்பு இங்கு லிங்கி ரூமா ராக்யாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இந்திய குடுப்பங்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. அன்றைய தினம் பகல் 12.00 மணியளவில் அவ்விபத்து ஏற்பட்டது. எந்தவொரு உயிர்சேதமும் இத்தீவிபத்தில் நிகழவில்லை.

இதனிடையே தீவிபத்தில் அழிந்த வீடுகளின் நிலையை கண்டறிய நேரிடையாக அப்பகுதிக்கு வருகை தந்த போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் மு.ரவி, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும்,கணிசமான தொகையை தனது நன்கொடையாகவும் அவர் வழங்கினார்.

Scroll to Top