என் தமிழ்

கவர்ச்சியுடன் நடித்தால் தான் சினிமா பீல்டில் நிற்கமுடியும்

mann

நவம்பர் 5, பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை உறவு முறை நடிகையான மன்னாரா, ஜிட்(ZID) என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் நவமபர் 28 ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நிர்வாண போஸ் தேவை என்று இயக்குனர் விவேக் அக்னொஹோத்ரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடிகை மன்னாரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் 29 ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் யூடியூப்பில் வெளியிடப்பட்டது இது வரை ந்த டிரைலரை 10.60 லடசம்பேர் பார்த்து உள்ளனர். 2 நிமிடம் 28 நொடிகள் ஓடும் இந்த டிரைலர் 30 மணி நேரம் இந்தியாவில் பாபுலர் வீடியோவாக இருந்து உள்ளது.

நிர்வாண போஸ் கொடுப்பதற்கு முன்னாள் தனது சகோதரி பிரியங்கா சோப்ராவிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவருடைய அனுமதியின்பேரில்தான் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் மன்னாரா தெரிவித்துள்ளார். நிர்வாண போஸ் கொடுத்தாலும் ஆபாசமின்றி கலைநயத்துடன் இருக்கவேண்டும் என தனது சகோதரி பிரியங்கா ஆலோசனை கூறியதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த மன்னாரா உடல் முழுவதையும் மூடிக்கொண்டு நடிக்க நாம் ஒன்றும் 1950களில் இல்லை என்றும், இது 2014, இந்த காலகட்டத்தில் கவர்ச்சியுடன் நடித்தால்தான் சினிமா பீல்டில் நிலைத்து நிற்கமுடியும் . அனைஅத்தையும் மூடிக்கொண்டு நடித்தால் டிவி தொடரில் மருமகலாகத்தான் நடிக்க முடியும். எனக்கு கவர்ச்சியான உடல்வாகு உள்ளது அதை காட்ட நான் தயங்க வில்லை என்றும் மன்னாரா கூறியுள்ளார். மன்னாராவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top