விவேகானந்த ஆசிரமம் பற்றிய அமைச்சரின் பதில் அதிர்ச்சி தருகிறது

விவேகானந்த ஆசிரமம் பற்றிய அமைச்சரின் பதில் அதிர்ச்சி தருகிறது

vik

நவம்பர் 5, தனியார் துறையின் கட்டுமான திட்டங்களில் அரசாங்கம் தலையிய இயலாது. ஆனால் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை இடிக்க வேண்டாமென நில உரிமையாளருக்கு அது ஆலோசனை வழங்கலாம் என கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறியிருக்கிறார்.

இதற்கு, மலேசியாவின் பாரம்பரிய வரலாற்று சின்னததை பாதுகாப்பதில் தனக்குள்ள பொறுப்பை தட்டி கழிக்கும் கூட்டரசு பிரதேச அமைச்சரின் அலட்சியப் போக்கு தமக்கு அதிர்ச்சி தருவதாக ஹிண்ட் ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார்.