BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இனி முழு PTPTN கடனுதவி

BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இனி முழு PTPTN கடனுதவி

ptptn-logo1

நவம்பர் 5, BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இனி முழு PTPTN கடனுதவி வழங்கப்படும்.
இந்த புதிய விதிமுறை கடந்த சனிக்கிழமை அமலுக்கு வருகிறது. இது மட்டுமல்லாமல் பொதுப்பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு 5% விழுக்காடு மற்றும் தனியார் உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு 15 விழுக்காட்டு பிடிபிடிஎன் கடனுதவி குறைக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை முதல் BR1M மட்டுமே முழு பிடிபிடிஎன் கடனுதவி வழங்குவதற்கான ஒரே விதிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
“வீட்டு வருமானம் 8000 ரிங்கிட்டை தாண்டாதவர்களுக்கு மொத்த கடனுதவியிலிருந்து 75% விழுக்காடு வழங்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.
இதனிடையே பொது உயர்கல்விக்கூடங்களில் டிப்ளோமா கல்வி பயில்பவர்களுக்கான கடனுதவி 5000 ரிங்கிட்டிலிருந்து 4750 ரிங்கிட்டாக குறைக்கப்படுகிறது. அதேவேளையில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான கடனுதவி 6500 ரிங்கிட்டிலிருந்து 6180 ரிங்கிட்டாககக் குறைப்படுகிறது.