மலாய் பைபிளை எரிக்கச் சொன்னது தேச நிந்தனையே

மலாய் பைபிளை எரிக்கச் சொன்னது தேச நிந்தனையே

sivaraj1

மலாயில் மொழி பெயர்க்கப்பட்ட கிறிஸ்துவர்களின் வேத நூலான பைபில் எரிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை வெளிப்படுத்திய டத்தோ இப்ராஹிம் அலி, தேச நிந்தனை குற்றத்தை செய்துள்ளார் என்றே தாங்கள் கருதுகிறோம்.

மலாய் பைபிள் நூலை எரிக்க வேண்டும் என்று இப்ராஹிம் அலியின் கருத்து தேச நிந்தனை குற்றத்திற்கு ஈடானது என்று தெரிவித்திருந்த அம்னோ இளைஞர் அணி தலைவர் கைரி ஜமலுடினின் கூற்றை வரவேற்கிறோம்.

இப்ராஹிம் அலி எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் அப்படியொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். தேச நிந்தனை கூற்றாகக் கருதப்படும் இந்த அக்ருத்தில் எந்தவொரு தேச நிந்தனையும் கிடையாது என சட்டத்துறை தலைவர் கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ம.இ.கா இளைஞர் அணி, கைரி ஜமாலுனுக்கு முழு ஆதரவு வழங்குகிறோம் அதேவேளையில், சட்டத்துறை தலைவரின் கருத்தை எதிர்க்கிறோம். மற்றொரு சமூகத்தின் சமய வேத நூலை எரிக்கச் சொல்வது தேச நிந்தனை குற்றமே அன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்.

இதுபோன்ற கருத்துகள் மக்களிடையே பல்வேறு முழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்திவிடகூடும். எனவே, இப்ராஹிம் அலியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மேலும் இது தொடர்பான சட்டத்துறை தலைவரின் விளக்கமும் ஏற்புடையதாகவும் இல்லை.