6 வருடத்துக்கு பிறகு ரிலீஸ் நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்

6 வருடத்துக்கு பிறகு ரிலீஸ் நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்

Rang-Rasiya-Pic

அக்டோபர் 29, பிரபல ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்கள் பிரசித்திபெற்றவை. அவரது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து கடந்த 2008ம் ஆண்டு ‘ரங் ரசியா என்ற படம் உருவானது. கேத்தன் மேத்தா இயக்கினார். ரன்தீப் ஹுடா, நந்தனா சென் நடித்தனர். இப்படத்தில் நிர்வாண காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் தணிக்கையில் ஒரு கட் கூட தரப்படவில்லை. இப்படத்தை வெளியிடக்கூடாது என்று பல்வேறு அமைப்பினர் அப்போது போராட்டம் நடத்தினர். இதையடுத்து பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இம்மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. ‘நீண்ட காலம் படம் ரிலீஸ் செய்யாமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்றதற்கு இயக்குனர் கேத்தன் மேத்தா பதில் அளித்தார். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம். அதை ரிலீஸ் செய்யக்கூடிய விநியோகஸ்தருக்காக காத்திருந்தேன். இப்போது சரியான நேரம் வந்திருக்கிறது. இன்றைய தினம் ரசிகர்களிடம் புதிய சிந்தனையுடன் படங்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். தணிக்கை குழுவினர் இப்படத்துக்கு கட் எதுவும் தராததுடன் பாராட்டும் தெரிவித்தார்கள். ரவிவர்மாவின் நிர்வாண ஓவியங்கள் புகழ்பெற்றவை. அவற்றுக்கு திரைபோட்டு காட்ட முடியாது. அப்படி செய்தால் அவற்றின் மதிப்பை குறைக்கும் செயலாகும். மேலும் இது ரவிவர்மாவின் கலை திறமைக்கும், கலை சுதந்திரத்துக்காக அவர் நடத்திய நீண்ட கால போராட்டத் துக்கும் அநியாயம் செய்ததாகிவிடும்.