அக்டோபர் 28, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்ட கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அப்போட்டியின் உயரிய இரட்டை தங்க விருதை பெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். பஹ்ரேன் மன்னர் மாணவர்களுக்கு இவ்விருதினை எடுத்து வழங்கினார்.
ரஷிகேஷ் ராமகிருஷ்ணன், பிரவிணா ராமகிருஷ்ணன், சுஷ்மிதா விஜியன் ஆகிய அம்முன்று மாணவர்களும் மூன்றாவது முறையாக இந்த அனைத்துலக ரீதியிலான அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்டனர்.
கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரட்டை தங்க விருதை பெற்று சாதனை
