மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் அவர்கள் பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தில் 24/10/2014 அன்று மாலை சுமார் 7.00 மணியளவில் தீபாவளி விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. கைரி ஜமாலுதீன், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ S. சுப்ரமணியம், டத்தோ ஸ்ரீ டாக்டர் S. சாமி வேலு, இந்திய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதரகர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பொது மக்களுடன் பல பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.