பூர்ணாவுக்கு விரைவில் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.‘வித்தகன், ‘துரோகி, ‘தகராறு, ‘ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்பு குறைந்ததையடுத்து தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்தினார். மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. புதிதாக பட வாய்ப்பு வராததால் தனது நேரத்தை வேறு விதமாக செலவிட முடிவு செய்தார். படங்களில் இனி பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது என எண்ணிய அவர் தனது சிறுவயது கனவான நடன பள்ளி தொடங்க முடிவு செய்தார். அதற்கு குடும்பத்தினர் சம்மதித்தனர். அதேசமயம் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பூர்ணாவிடம் கேட்டுக்கொண்டனர். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டாராம். தற்போது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருப்பதால் இல்லறத்தில் நுழைய தன்னை தயார் செய்துகொண்டிருக்கிறார் பூர்ணா.