அக்டோபர், 16 சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடிக்கவரவில்லை’ என்றார் கார்த்திகா.‘கோ‘, ‘கொடி வீரன்‘ படத்தில் நடித்திருப்பவர் கார்த்திகா.
நான் பணியாற்றும் படங்களின் இயக்குனர்கள் என்னிடம் பேசும்போது இந்த கதாபாத்திரத்துக்கு எங்களுடைய முதல் தேர்வாக நீங்கள்தான் இருந்தீர்கள் என்று கூறுவார்கள். ‘ஜோஷ்‘ தெலுங்கு படத்தில் நடித்தபிறகு தமிழ், மலையாளத்தில் பிஸியாகிவிட்டேன். கே.வி.ஆனந்த், பாரதிராஜா இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். நான் தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்வதற்கு காரணம் இருக்கிறது. நடித்தால்தான் சாப்பாட்டுக்கு வழி என்ற நிலைமை எனக்கில்லை. வாழ்வதற்காக நான் நடிக்கவில்லை. சிறிய வேலை செய்தாலும் அதன் மூலம் மரியாதை கிடைக்கிறதா என்பதுதான் எனக்கு முக்கியம். இதுவரை அந்த அதிர்ஷ்டம் எனக்கு இருந்திருக்கிறது. எனது தோல் நிறம் எனக்கு சாதகமாகவே இருக்கிறது. இது கவர்ந்திழுக்கும் ஒரு நிறம். நான் அறிமுகமான சமயத்தில், ஒரு இந்திய முகத்தை திரையில் பார்க்கும் உணர்வு ஏற்பட்டதாக பலர் கூறினார்கள். ஒளிப்பதிவாளர்களும் எனது நிறத்தை பிளஸ் பாயின்ட் என்றே கூறி இருக்கிறார்கள். எனது உயரமும், புருவங்களும் ஸ்பெஷல். இவை இரண்டும் இல்லாதிருந்தால் பத்தோடு பதினொன்றாக என்னை சேர்த்திருப்பார்கள். ‘புறம்போக்கு‘ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன்.
சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடிக்க வரவில்லை:கார்த்திகா
