வியட்னாம் நாட்டுக்கு சொந்தமான எண்ணை கப்பல் ஒன்று வெளிநாட்டில் இருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு வியட்னாம் நாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு வந்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது. பின்னர் அந்த கப்பலை காணவில்லை. இதை கடற்கொள்ளைக்காரர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சமீப காலமாக தெற்கு ஆசிய கடல் பகுதியில் சரக்கு கப்பல்களை கொள்ளைக்காரர்கள் கடத்தி சென்று அதில் உள்ள பொருட்களை திருடிவிட்டு கப்பலை அனுப்பி வருகிறார்கள். அதே போல இந்த கப்பலையும் எண்ணை பொருட்களை திருடுவதற்காக கடத்தி சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 12 கப்பல்கள் அந்த பகுதியில் கடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.