இலியானா பேச்சால் பரபரப்பு

இலியானா பேச்சால் பரபரப்பு

Ilea

ஆணுடன் உறவு வைப்பதுபற்றி இலியானாவின் ஆபாச பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாலிவுட் ஹீரோயின்கள் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள். ஜோடியாக சுற்றுவதிலிருந்து உறவு வைத்துக் கொள்வதுவரை பகிரங்கமாகவே பேட்டி தருவதுடன் ஒரு சில ஹீரோயின்கள் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பும் ஏற்படுத்துகின்றனர். கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அசின், காஜல் போன்றவர்கள் ஓரளவுக்கு அடக்கி வாசிக்கின்றனர். இந்த வரிசையில் பாலிவுட்டுக்கு போன இலியானா தற்போது அதிரடியாக பேச ஆரம்பித்திருக்கிறார். ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதுபற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி பாலிவுட் ஹீரோயின்களுக்கே வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘செக்ஸ் பற்றி எனது தந்தையிடம் நான் பகிரங்கமாக பேசுவேன்’ என்றார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெண்கள் ஆரோக்கிய இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,‘செக்ஸ் வைத்துக்கொள்வதால் உடலை கச்சிதமான ஷேப்பில் வைத்துக்கொள்ள முடிகிறது. அது இன்பமான தருணம்.அப்படி இருக்கும்பட்சத்தில் அதை ஏன் தவிர்க்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.