தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு மற்றும் உச்சமன்ற கூட்டம் 4-10-2014 அன்று தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைமையக அலுவலகத்தில் நடந்தேறியது. இதில் அனைத்து மாநில தலைவர்களும் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து மாநில தலைவர்களுக்கும் 6 மாதங்களுக்கான செயல் திறன் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் அவர்கள் தெரிவித்தார். இச்செயல் திட்டத்திற்கு சுங்கை சிப்புட் நேருஜி தலைமை ஏற்றுள்ளார்.
மேலும் இந்து கடவுளை அவதூறாக முகனூலில் குறிப்பிட்ட நாம் பிலாஸ்ட் மற்றும் இந்து தெய்வங்களின் உருவ அமைப்பு பற்றி தரக்குறைவாக உரை நிகழ்திய ஷாஹூல் ஹாமீட் மீது புகார்கள் செய்திருப்பினும், காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து இதுவரை பொறுமை காத்த தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவை சேர்ந்த 1000 பேர் கொண்ட போரட்ட குழுவுடன் கூடி, வரும் வியாழனன்று புத்ரா ஜெயாவிலுள்ள சட்டதுறை அலுவலகம் முன் சட்டதுறை தலைவரிடம் மனு சமர்ப்பிக்க உள்ளதாக கூறினார். பொது மக்களும் இக்கூட்டதில் கலந்து கொள்ள வேண்டுமென திரு சிவராஜ் சந்திரன் கேட்டு கொண்டார்.
வரும் தீபாவளி பெருநாளின் போது இரண்டு நாள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக கூறிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும் நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களுக்கு சாலைதடை விதிகளை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் பிரதம துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்படவுள்ளது.
40 வயதை கடந்த இளைஞர் பிரிவின் தலைவர்கள் தொடர்ந்து தங்களின் அரசியல் பயணத்தை தொடர்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஒரு புதிய கிளையமைக்க இலகுவாக சட்ட அமலாக்கம் வேண்டும். தேசிய தலைவரிடம் இவ்வேண்டுகோளை விடுக்க உள்ளதாக தெரிவித்தார். இதன் வழி கட்சி மேலும் பலப்படும். இதற்கு முன் சேவையாற்றிய 5 தேசிய இளைஞர் பிரிவின் தலைவர்கள் இப்பொழுது காணமல் போயுள்ளதாக பேராக் மாநில தலைவர் திரு.வீரன் தெரிவித்தார். மேலும் தேசிய முன்னனியின் கூட்டனி கட்சிகளில் இளைஞர் பிரிவின் பங்களிப்பு பெறுவாரியாய் உள்ளது. உதாரணத்திற்க்கு டத்தோ ஹிசாமூடின் இவர் முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர், ஆனால் ம.இ.கா தேசியத்தில் மட்டும் இது விதிவிலக்காவே உள்ளது எனவும் திரு.வீரன் கூறினார்.