எரிபொருள் விலை-உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர்களும் கலந்துகொள்வர் என அதன் தலைவர் சுஹாய்சான் காயாட் தெரிவித்தார் .
“பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து எரிபொருள் விலை-உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இதுவே சரியான தருணம். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் நாட்டின் விளைபொருள்களை அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. எரிபொருள் விலை உயர்வால் அவர்கள் துன்புறக்கூடாது”, என்றாரவர்.பணவீக்கத்துக்கு எதிரான கூட்டமைப்பு புதன்கிழமை அக்டோபர் 8-ஆம் நாள் நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.