மலேசிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கோலாலம்பூரில் நடந்தது. இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்–போலந்தின் மார்சின் மாட்கோவ்ஸ்கி ஜோடி 3–6, 7–6 (5), 10–5 என்ற செட் கணக்கில் ஜமி முர்ரே (இங்கிலாந்து)– ஜான் பீர்ஸ் (ஆஸ்திரேலியா) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த சீசனில் பெயஸ் வென்ற முதல் பட்டம் இது தான். தரவரிசையில் 35–வது இடத்திற்கு தள்ளப்பட்ட அவருக்கு இந்த வெற்றியின் மூலம் 250 தரவரிசை புள்ளிகள் கிடைத்தன.