சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால், 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையெடுத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இன்று மனு தாக்கல் செய்யப்படும். மேலும், அவரை குற்றவாளி என, அறிவித்ததற்கும், விதிக்கப்பட்ட தண்டனைக்கும் தடை விதிக்கக் கோரி, மனு தாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனையிலும், வழக்கறிஞர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றார்.
ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று அவரின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல்.
