உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு

4

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்தில் வழங்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நாளை சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூருவில் வழங்கப்  படவுள்ள நிலையில் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனக்கு  பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை  விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.