ஐ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

ஐ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

7

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படம் ஐ.ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீஸரை இதுவரை 60 இலச்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு எந்த ஒரு தமிழ் படத்தின் டீஸரையும் இவ்வளவு பார்வையாளர்கள் பார்த்ததில்லை. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்த ஐ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் படத்தின் இயக்குனர் ஷங்கர், நாயகன் விக்ரம், நாயகி எமி ஜாக்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.விரைவிலேயே ஐ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.