கோலாலம்பூர், 26 நவம்பர் 2026 : நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும்போது, அங்கு ஏற்கெனவே வசிக்கும் மக்களின் உரிமைகளும் நலன்களும் உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மறுசீரமைப்புக்குப் பின்னர் குடியிருப்பாளர்களுக்கு வசதியான வீடுகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் உரிமைகளுக்கு உரிய உத்தரவாதங்களும் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
மேலும், இத்திட்டங்களுக்கு குடியிருப்பாளர்களின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகள், ஒப்புக்கொள்ளாதவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்பாட்டாளர்கள் தங்களது ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வது உள்ளிட்ட அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.
‘Di Sebalik Keputusan…’ சிறப்பு தேசிய உரையாடல் நிகழ்ச்சியில் நகர்ப்புற மறுசீரமைப்பு தொடர்பான இந்த விவகாரங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார்.







