என் தமிழ்

இலங்கை EXPO 2027 வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்க மலேசிய வர்த்தகர்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், 26 நவம்பர் 2026 : மலேசிய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை ஆராயும் வகையில், இலங்கையில் நடைபெறவுள்ள Sri Lanka EXPO 2027 கண்காட்சியில் பங்கேற்க மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (KLSICCI) அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் மலேசியத் தூதரகம் வழங்கிய இந்த அழைப்பின் மூலம், KLSICCI உறுப்பினர்கள் உள்ளிட்ட மலேசிய வர்த்தகர்கள் 2027 ஜனவரி 14 முதல் 17ஆம் தேதி வரை கொழும்பில் உள்ள BMICH வளாகத்தில் நடைபெறும் இந்த சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சியில் பங்கேற்கலாம்.

750க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ள இந்நிகழ்ச்சியில் ஆடை மற்றும் துணிகள், நகைகள், உணவு மற்றும் விவசாயம், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இடம்பெறவுள்ளன.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் வாங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட B2B சந்திப்புகள், முதலீட்டு கருத்தரங்குகள், வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் மற்றும் தகுதியுடைய சில பங்கேற்பாளர்களுக்கு இலவச தங்குமிட வசதிகளும் வழங்கப்படலாம்.

இதற்கான பதிவுகள் 2026 டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மேலும் விவரங்களுக்கு KLSICCI செயலகத்தை 03-26931033 அல்லது 012-2561033 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். அல்லது enquiry@klsicci.com.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

பதிவு செய்ய : https://forms.gle/Xtk7BHmSJk6uLNtk9

Scroll to Top