என் தமிழ்

புத்ராஜெயாவில் தேசிய ஒற்றுமை மாநாடு : நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை – பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

புத்ராஜெயா, 26 நவம்பர் 2026 : நாட்டின் தேசிய அடையாளம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துகள், அனுபவங்கள் மற்றும் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தேசிய ஒற்றுமை அமைச்சகம் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் மாநாட்டில் (Persidangan Pembinaan Negara Bangsa) பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2026 நவம்பர் 30 முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை, திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை, காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) இம்மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பல்வேறு சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசாங்க நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் (NGO), தனியார் துறையினர், ஊடகப் பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி தேசிய அடையாளத்தை உருவாக்குதல், நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

மாநாடு குறித்த கூடுதல் தகவல்களை https://negarabangsa.perpaduan.gov.my/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பதிவு செய்ய : https://negarabangsa.perpaduan.gov.my/#rsvp

Scroll to Top