பினாங்கு, 26 நவம்பர் 2026 : பினாங்கில் பல்வேறு சமயங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வு, ஒற்றுமை, நல்லிணக்கத்தை வளர்த்து வரும் Penang Harmony Corporation (HARMONICO), தனது ஐந்தாண்டு பயணத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. HARMONICO அமைப்பின் ஐந்தாண்டு நிறைவு விழாவையொட்டி தயாரிக்கப்பட்ட நினைவுப் புத்தகத்தை பினாங்கு மாநில ஆளுநர் துன் ரம்லி நகா தாலிப் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பினாங்கு முதலமைச்சர் சோ கோன் இயோவும், HARMONICO தலைவர் லிம் சியூ கிம்மும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு இன்று Citadines Connect Bertam, பினாங்கில் நடைபெற்றது.
பினாங்கில் பல்வேறு சமயங்கள் மற்றும் இன மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் HARMONICO அமைப்பின் முயற்சிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயணத்தில் மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலப் பேரவையும் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அச்சங்கம், அதன் மாநிலத் தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன் PKT.PJK.PJM, HARMONICO நிர்வாகக் குழு உறுப்பினராக ஆற்றிவரும் பங்களிப்பையும் சேவையையும் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்வேறு சமயங்களுக்கிடையே பாலங்களை அமைத்து, சமூகங்களின் இதயங்களை இணைத்து, பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









