என் தமிழ்

சிரம்பான் திரு அண்ணாமலையார் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா: டத்தோ ஸ்ரீ சரவணன் பங்கேற்பு

சிரம்பான், 26 நவம்பர் 2026 : சிரம்பான் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரு அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் பக்தர்கள் தீபங்களை ஏற்றி சிவபெருமானையும் முருகப்பெருமானையும் மனமுருகி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா. தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து கொண்டார்.

இருளை அகற்றி ஞான ஒளியை வழங்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது வாழ்வில் நன்மைகளையும் வளத்தையும் புதிய ஒளியையும் அளிக்கும் என்பது ஐதீகமாகும். இந்தப் புனித நாளில் ஆலயத்தில் நடைபெற்ற தீபம் ஏற்றும் வைபவத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

Scroll to Top